திருவாரூர் : மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேமன் நலநிதியிலிருந்து உதவி தொகை பெற்று வாங்கப்படுகிறது. அதன்படி மே 13 திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 7 காவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேம நலநிதியிலிருந்து ரூ 2.19.514. க்கான காசோலையை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்