திருச்சி: தமிழ்நாடு காவல்துறை திருச்சி சரகம் , திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து பள்ளி அளவிலான காவலர் குழுமம் (Police Club) துவக்க விழா நிகழ்ச்சி 27.01.2020 காலை 10. மணி அளவில் மாவட்ட ஆயுதப்படை திருமாங்கல்ய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் P.அஜீம் அவர்கள் வரவேற்றார். மாவட்ட அளவில் குழந்தைகள் குழுமம் தொடங்கப்பட்ட விபரம் லால்குடி உட்கோட்டம் வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளி ,முசிறி உட்கோட்டம் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ,ஜீயபுரம் உட்கோட்டம் சிறுகாம்பூர் அரசு மேல் நிலைப்பள்ளி, மணப்பாறை உட்கோட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவரம்பூர் உட்கோட்டம் திருவரம்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காவலர் குழுமம் மாவட்ட அளவில் முதல் கட்டமாக துவங்கப்பட்டது.
துவக்க விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து காவலர் குழுமத்தை துவக்கி வைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் V. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பேசுகையில் பள்ளி அளவில் காவலர் குழுமம் தொடங்கப்படுவதன் அவசியம் குறித்தும் பள்ளி அளவில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது மற்றும் முதலுதவி பயிற்சி, தற்காப்பு கலைகளை வளர்த்தெடுப்பது மற்றும் சமுதாய அளவில் காவலர் குழுமம் மாணவ, மாணவியர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.
பிரைன் ஜிம் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலமுருகன், செயல் இயக்குனர் அமர்நாத் ,தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திட்ட அலுவலர் பிரபாவதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆலோசகர் முத்துமாணிக்கம் ஆகியோர் குழந்தை திருமண தடை சட்டம், குழந்தை உரிமைகள் மற்றும் வளரிளம் பருவத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக எவ்வாறு இருக்கவேண்டும், ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களை உட்கொள்வது அவசியம் குறித்து பேசினார்கள். மாணவர்களுக்கு அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற காவலர் குழுமம் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி