தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்கள் நேற்று (16.12.2021)-ல் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி ஆயுதப்படையில் நடைப்பெற்ற வருடாந்திர ஆய்விற்கு வருகை தந்த சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சி.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் வரவேற்றார். இதில் தொடக்க நிகழ்ச்சியான காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு காவல் வாகனங்கள் , உடை பொருட்கள், அலுவலக பதிவேடு பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை, ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.செல்வமணி மற்றும் தனி பிரிவு காவல் ஆய்வாளர் திரு.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.