தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் நேரில் சென்று ஆய்வு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் (09.09.2022), தூத்துக்குடி ஆயுதப்படைக்கு நேரில் சென்று காவலர் அங்காடி, காவலர் உணவு விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு நேரில் சென்று குடியிருப்பு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் திரு. கணேச மணிகண்டன், உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.