பெரம்பலூர் : தமிழ்நாடு அளவில் காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழும் வெகுமதியும் காவலர் வீட்டு வசதி கழகம் அளித்து வருகிறது.
அந்த வகையில் 2017 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிப்பதில் பெரம்பலூர் மாவட்டம் ஆயுதப் படையில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.சக்திவேல் என்பவர் பெரம்பலூர் மாவட்டம் ஆயுதப்படை அலுவலகம், காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை வளாகம் போன்ற இடங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் சரிவர பராமரித்து சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்.
அவரை பாராட்டும் வகையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் அளித்த பாராட்டு சான்றிதழ்களையும் ரூபாய் 10,000/- த.கா. சக்திவேல் அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் வழங்கி பாராட்டினார். அப்போது ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரவி, உதவி பொறியாளர் திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி