அரியலூர் : மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.H.M ஜெயராமன் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் 12.10.2020 இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து காவலர் குடியிருப்புகளில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களால் முருங்கை மரக்கன்றுகள் நடப்பட்டது.
முருங்கைக் கீரையில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் முருங்கைக் கீரை உதவுகிறது. வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. எனவே முருங்கை மரத்தின் பயன் அறிந்து நாமும் பயன் பெறுவோம்!!