சிவகங்கை: சிவகங்கை காவலர் குடியிருப்பில் நேற்று(14.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காவலர் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நிகழ்த்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் பயிற்சி காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஸ், இ.கா.ப., அவர்கள் மற்றும் சிவகங்கை உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. முத்து மாணிக்கம் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வின் அவர்கள் மற்றும் தனிப் பிரிவு ஆய்வாளர் திரு உதயக்குமார் ஆயுதப்படை ஆய்வாளர் திரு. சீமான் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், காவலர்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி