கோவை: கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் திரு.லெனின் பீட்டர் 35.இவர் ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.நேற்றிரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.
இன்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது,உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் பணம் ரூ 70 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை..இது குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றபிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்