திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் விதமாக செயல்பட்டு வரும் காவலர் உணவகத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இன்று (19.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தும், உணவின் தரத்தினை கண்டறிய சிற்றுண்டி விடுதியில் உணவு உட்கொண்டும், டீ குடித்தும் ஆய்வு செய்தார்கள். மேலும், உணவிற்கான தொகையை QR Scanner முறையில் செலுத்தியும், QR Scanner சரியான முறையில் செயல்படுகிறதா என உறுதி செய்தார்கள். அப்போது, திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு ஆயுதப்படை) திரு.P.மணிகண்டன் அவர்கள் உடனிருந்தார்கள்.