திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்க குறைதீர்ப்பு நாள் (Grievance day) நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பெறப்பட்ட மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் பரிசீலனை செய்து காவல் உதவி-ஆய்வாளர்கள் மற்றும் காவல் அலுவலர்கள் உட்பட 110 -பேருக்கு அவரவர் விருப்பம் தெரிவித்த காவல் நிலையங்களில் பணி நியமித்து ஆணை பிறப்பித்து குறைகளை நிவர்த்தி செய்து தீபாவளி பண்டிகை பரிசு அளித்துள்ளார்கள்.
மேலும் மாவட்ட காவல்துறைக்கு தன்னை அற்பணித்து இரவு பகலாக பல்வேறு சூழ்நிலைகளில் சட்டம் ஒழுங்கு,குற்றத்தடுப்பு,போக்குவரத்து ஒழுங்கமைவு பணிகளை சிறப்பாக செய்து வரும் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா