சென்னை: ஆயுதப்படை காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கான நடைமுறையை எளிதாக்க சென்னை காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள விடுப்பு செயலியை CLAPP முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு குறிப்பிட்ட செய்திக்குறிப்பில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் 5800 காவலர்கள் உள்ளனர் இதில் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பதவி நிலையில் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமைக்கு இடையில் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விடுப்பு பெறவேண்டி வழிவழியாக உதவி ஆய்வாளர் ஆய்வாளர் உதவி ஆணையரை நேரடியாக சந்தித்து மனு சமர்ப்பித்தல் பெற்று பின்னர் ஆயுதப் படை அலுவலகத்தில் தினசரி நாட்குறிப்பில் முறையாக பதிவு செய்து செல்ல வேண்டும் இது கடினமாக இருப்பதால் காவலர்கள் நலன் கருதி புதிதாக CLAPP என்ற செயலி முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது
காவலர்கள் தங்களிடமுள்ள கைபேசியில் தமிழ் நாடு காவல் CLAPP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே நேரடியாக தற்செயல் விடுப்பு ஈட்டிய விடுப்பு மருத்துவ விடுப்பு வாராந்திர அனுமதி விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டி ஆன்லைன் மூலம் சமர்பிக்கலாம் இது வழி வழியாக அவர்களின் மேல் உள்ள அதிகாரிகளுக்கு சென்றடையும் விடுப்பு ஆணை பெற்றுக்கொண்ட காவலர்கள் நேரடியாக அலுவலகம் சென்று கடவுச் சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம்.
ஈட்டிய விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு களைப் பொருத்தவரை காவல் ஆணையர் அலுவலக விடுப்பு பிரிவு மற்றும் நிர்வாக அலுவலர் சரிபார்ப்புக்கு பின் பணிப் பதிவேட்டில் பதிவு செய்து தலைமையிடத்து துணை ஆணையருக்கு விடுப்பு ஆணை பெறு வதற்கு அனுப்பப்பட்டு வழங்கப்படும்.
இந்த செயலியில் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கு மூன்று மணிநேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது இந்த அவகாசத்திற்குள் நடவடிக்கை எடுத்து மேலே தவறினால் படிப்படியாக காவலர்களின் கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அதிகாரிகளை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது இணையதள வசதி இல்லாதவர்கள் CLAPP V2 செயலி மூலம் குறுஞ்செய்தி வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள விடுப்பு செயலி நேற்று முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் வெளியிட்டார் இந்த நிகழ்ச்சியில் உள்துறை செயலாளர் திரு.எஸ் கே பிரபாகர் டி.ஐ.ஜி திரு.சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
