தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசுப் பேருந்தில் பயணிப்பது தொடர்பாக காவலர் மற்றும் நடத்துனர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது மாநில மனித உரிமை ஆணையம்.
இந்த நோட்டீஸை தொடர்ந்து, தற்போது காவலர்கள் காவலர்கள் முறையான வாரன்ட் இல்லாமல் தங்கள் சொந்த வேலைக்காக இலவசமாக பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.















