கடலூர் : கடலூர் காவலர் பயிற்சி பள்ளி 10 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரொனா நோய் தொற்று காரணமாக அவர்கள் சிகிச்கையில் இருந்து வரும் நிலையில் ஏனைய பயிற்சி காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் பயிற்சிகள் டாக்டர் இளந்திரையன் அவர்கள் பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் பயிற்சி காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சி பெறும் வகையில் சமூக இடைவெளியுடன் குழுக்கள் அமைக்கப்பட்டு கொரொனா தடுப்பு முக்கியத்துவத்தை கோல ஓவியமாக வரைந்துள்ளனர். இந்த கோல ஓவியத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு M. ஸ்ரீஅபிநவ் IPS அவர்கள் பார்வையிட்டு முதல் ஓவியப் போட்டியில், கோல ஓவிய போட்டிக்கு பயன்படுத்திய நிறம், பொருட்கள்,விழிப்புணர்வு கோல ஒவியத்தை பற்றி விளக்கி கூறிய விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர்
திரு சுந்தரம் , டாக்டர் இளஞ்திரையன், ஓவியர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்