திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ராஜன் அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N.நிர்மலா, உதவி ஆய்வாளர் திரு.S.சுமன் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவலர்கள் இணைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சிகல்பாறை காட்டுப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐந்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2500 லிட்டர் கள்ளச் சாராய ஊரல் கண்டுபிடித்து கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்