இராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு மே 15ம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை ஒட்டி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வார நாட்களில் காலை 10 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு கடையடைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றும் நபர்களை ராமேஸ்வரம் காவல்துறையினர் வழிமறித்து அவர்களை தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்து அனுப்புகின்றனர்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்