சென்னை: உங்கள் துறையில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று (28.12.2021) 3வது நாளாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து 47 மனுக்களை பெற்றார்.
கடந்த 24.12.2021, 27.12.2021 மற்றும் இன்று (28.12.2021) ஆகிய 3 தினங்களில் மொத்தம் 939 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் தலைமையில், இன்று (28.12.2021) மதியம் சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்களில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இம்முகாமின் 3வது மற்றும் இறுதி நாளில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடம் நேரடியாக காவலர்களின் குறைகளை கேட்டறிந்து.
பணி இடமாறுதல், தண்டனை களைதல், ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் உள்ளிட்ட 47 மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கடந்த 24.12.2021 அன்று 431 மனுக்களும், 27.12.2021 அன்று 461 மனுக்களும், இன்று (28.12.2021) 47. மனுக்களும் என 3 நாட்களில் மொத்தம் 939 மனுக்களை, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் இருந்து நேரடியாக பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இம்முகாமில், கூடுதல் ஆணையாளர் முனைவர் திரு. J.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் திரு.L.பாலாஜி சரவணன், (தலைமையிடம்), திரு.K.சௌந்தராஜன் (ஆயுதப்படை), திரு.ரவிச்சந்திரன் (ஆயுதப்படை), திரு.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்