சென்னை: பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் சென்னை எழும்பூரில் பயன்பாட்டில் இருந்து வரும் காவலர் மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் (TNMSC) மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் உதவியுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் முயற்சியின் பேரில் கடந்த 26.5.2021 முதல் COVID –Ward ஆக மாற்றம் செய்யப்பட்டு 75 படுக்கை வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை, எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனைக்கு சென்று, கொரோனா கவச உடையணிந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமைனையின் மருத்துவஅதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தும் மருத்துவ பணியாளர்களின் பணியினை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் திரு. N.கண்ணன்,இ.கா.ப, இணை ஆணையாளர் கிழக்கு மண்டலம், திரு.V.பாலகிருஷ்ணன், இ.க.பா, துணை ஆணையாளர்கள் திருP.பகலவன், (திருவல்லிக்கேணி) திரு.ஶ்ரீதர் பாபு, (நுண்ணறிவுப்பிரிவு), திரு.சௌந்தரராஜன் (ஆயுதப்படை ), மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.