பெரம்பலூர் 18.05.2020 இரவு 12.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறையில் (SBCID) பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்கள் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளைய காவல்நிலைய உதவி ஆய்வாளா் திரு.பழனி அவர்கள் உடல்நலகுறைவால் இன்று உயிரிழந்தாா். உதவி ஆய்வாளரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
திண்டுக்கல்லில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை, போலீஸ் விசாரணை.
WHC 188 பரமேஸ்வரி என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிபவர் சீலப்பாடி காவலர் குடியிருப்பு எதிரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்