தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரத்தநாடு உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் ஒரத்தநாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சுதா அவர்கள் தலைமையில் திருவோணம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.விஸ்ணுபிரசாத் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 1070 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளான ரஹமதுல்லா மற்றும் சுரேஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.