பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்கா விற்பனையை தடை செய்யும் வகையில் சிறப்பு படை அமைத்தனர். அதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் நகர காவல்நிலைய முதல் நிலை காவலர் திரு.லட்சுமணன் மற்றும் காவலர் திரு.இராஜவேல் ஆகிய இருவரையும் அழைத்து பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
திரு.சரவணன் அவர்கள் இன்று 28.07.2021-ம் தேதி மேற்படி நபர்களின் மெச்ச தகுந்த பணியினை பாராட்டி அவர்களை சிறப்பிக்கும் வகையில் பண வெகுமதி வழங்கியும், மேலும் இதுபோன்று பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை