முதலாவது அகில இந்திய காவல்துறை பளுத்தூக்கும் குழு போட்டிகள்- 2024 ஆனது (23.09.2024) முதல் (27.09.2024) வரை சத்திஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில் துர்க் நகரில் நடத்தப்பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்ந்த 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு 1-தங்கம், 3-வெள்ளி, 10-வெண்கலம் ஆக மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேற்கண்ட வீரர்களை உயர்திரு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி