ஈரோடு : காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டலம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.A.சுஜாதா அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.