வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் இ.கா.ப. அவர்களின்
வழிகாட்டுதலில் சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையிலே.பேர்ணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்தரபள்ளி தமிழ்நாடு-ஆந்திரா எல்லை சோதனைச் சாவடியில் (16.02.2025) அன்று வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுதலைமைக் காவலர் எண் 1196 தமிழழகன் மற்றும். மேல்பாடி காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் எண் 1351 ரேகா ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது. சந்தேகத்திற்கிடமான ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை
செய்தபோது பேர்ணாம்பட்டு கள்ளிச்சேரியைச் சேர்ந்த குற்றவாளி அப்பு அருண்குமார் (வயது 30). என்பவர் கர்நாடக மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்த 520 மது பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மது மற்றும் வாகனம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த சிறப்பான சேவைக்கு பாராட்டுக்களாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்கள் காவலர் தமிழழகன் மற்றும் காவலர் ரேகா ஆகியோருக்கு நேரில் அழைத்து வெகுமதி
மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி பாரட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி