இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உட்கோட்ட, நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்ப்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் வழிப்பரி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக மூன்று ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை பாராட்டி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் இ.கா.ப அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப பரிசுகள் வழங்கினார்.
காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 1081 திரு.தேவராஜ் என்பவர் தன் குடும்ப சேமிப்பு பணம் ரூபாய் 21,000/-ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் இ.கா.ப. அவர்களிடம் கொரோனா கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்