ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து,களவுச் சொத்துகளை மீட்ட காவல் துறை அலுவலர்களை நேரில் அழைத்து மாண்புமிகு முதலமைச்சர் திரு மு. க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து,பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.