சென்னை : தமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்கள் காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி காவல்துறை இலாகாவை கவனித்து வரும் முதல் அமைச்சர் திரு.எடப்பாடி.K. பழனிச்சாமி இன்று காவலர்களுடன் பொங்கல் கொண்டாடினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று சென்னை புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவல்துறை குடும்பத்தினரின் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் அங்கு கிராமிய கலை நயத்துடன் அமைக்கப்பட்டு இருந்த குடிலை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு. பா. பெஞ்சமின், அரசு கூடுதல் தலைமை செயலாளர் உள் மதுவிலக்கு மற்றும் தீர்வைத் துறை திரு. எஸ். கே. பிரபாகர், ஐஏஎஸ் காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி IPS, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறையின் காவல்துறையினர் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
