ஈரோடு : ஈரோடு மாவட்டம் கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த சமயம் 13.4.2020 அன்று ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் காவலர் திரு.மாதேஸ் என்பவர், கொரோனா பணியிலிருக்கும் பொழுது மாவட்ட கண்காணிப்பாளர்அவர்களை பதட்டமாகவந்து சந்தித்து, அய்யா எனது மனைவி சவீதாமணி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் டீரிட்மென்ட் பார்த்துவருகிறேன். தற்போது மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளேன்.
ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த சொல்கிறார்கள். ஊரடங்கு காலமாக இருப்பதால் என்னால் தொகை செலுத்த இயலாத சூழலில் இருக்கிறேன் என தனது நிலையைவிளக்கினார்.
நிலையை புரிந்த, காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசன் I.P.S.,அவர்கள் உடனடியாக அம்மருத்துவமனையின் எம் டி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனது காவலரின் மனைவிக்கு பிரசவம்பாருங்கள் எவ்வளவு தொகை மருத்துவமனைக்கு செலுத்தவேண்டுமோ நான் செலுத்துகிறேன் என கூறினார் .
காவலரிடம் நீங்கள் போய் மனைவியுடன் உடனிருந்து கவனித்து கொள்ளுங்கள் என ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார். 14.4.2020 ல் அக்காவலருக்கு அழகான பெண்குழந்தை பிறந்து. கடந்த 18.5.20 வரை மருத்துவமனையில் இருந்து நல்ல உடல் நலத்துடன் தாயும்,சேயும் வீடு திரும்பினார்கள், அக்காவலர் தனது மனைவி மற்றும் தனது கைக்குழந்தையுடன் இன்று அலுவலகம் வந்து SP அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
எஸ் பி அவர்கள் தான் கொடுத்த வாக்குப்படி அக்காவலருக்கு தனது சொந்த பணத்தில் மருத்துவ செலவு தொகையை காவலருக்கு கொடுத்தார்.மேலும் காவலரின் குழந்தைக்கு அழகிய தமிழ்பெயர் வையுங்கள் என குழந்தையை வாழ்த்தி அனுப்பினார்கள்.
இந் நிகழ்வு ஈரோடு மாவட்ட காவலர்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மனிதநேய SP அவர்களுக்கு நாமும் நம் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்