அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் 17/03/2020 அன்று அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு தீயணைப்பு துறையினரால் சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதில் தீ விபத்தின் போது எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும். மின்சார தாக்குதலிலிருந்து எவ்வாறு மீட்பது. தீ விபத்தின் போது எவ்வாறு துரிதமாக செயல்படுவது, பேரிடர் மீட்பின் போது எவ்வாறு செயல்படுத்துவது, என்று ஆயுதப்படை காவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி வகுப்புகளில் தெரிந்து கொண்டனர்.