திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில் அவர்கள் முன்னிலையில், ஆயுதப்படை ஆய்வாளர் திரு.மகேஸ்வரி அவர்கள் ஏற்பாடு செய்த சிறந்த தற்காப்பு கலை நிபுணரை கொண்டு, காவலர்களுக்கு தற்காப்புக் கலைகள்(கராத்தே) குறித்த பயிற்சி சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.
தற்காப்பு கலை குறித்த பயிற்சி வகுப்பினை தொடர்ந்து, காவலர்களுக்கு கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கவாத்து பயிற்சியின் நிறைவாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி