திருவாரூர் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த – 32 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தமிழக அரசு சார்பாக பணி நியமன ஆணையை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களை கூறி பணி நியமன ஆணையை வழங்கினார்கள். மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காவலர்கள் ஆகிய நீங்கள், காவல்துறை பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும் தங்களது பணியினை திறம்பட செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.