விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS அவர்கள் முயற்சியின் பேரில்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட காலம் கடத்தி வந்த வந்த ஆண் மற்றும் பெண் காவலர்களை நேரில் அழைத்து டாக்டர் திரு.தழிழன்பன் (இணை இயக்குனர், சுகாதார துறை).அவர்கள் முன்னிலையில் காவலர்களுக்கு தடுப்பூசி குறித்த விளக்கங்களையும், காவலர்களின் சந்தேகம் குறித்து ம்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 3வது அலைக்கான காலகட்டத்தில் இருப்பதால் நம்மையும் நம் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம்.
எனவே தடுப்பூசியும் ,முக கவச. மும்தான் நம்மை காப்பாற்றும் என்பதால் அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.