இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 58 காவலர்கள் கலந்து கொண்டு தங்களது பணியிட மாறுதல் உள்ளிட்ட குறைகளை மனுவாக அளித்தனர். அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக கேட்டறிந்து, அவற்றிற்கு உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.சதீஷ்குமார் ஆகியோர் உட்பட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.