திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS., அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறியும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊர் காவல் படையினர்கும் கபசுர குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் திரு. ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சீமைச்சாமி, திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர்
திரு.மானக்சா, டாக்டர் திரு.கௌதம், தனிப்பிரிவு ஆய்வாளர் திரு ராஜேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.