பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று (04.02.2021) காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ பரிசோதனை முகாமை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் இம்முகாமில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்தாஸ் மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.