தேனி: தேனி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி ஆயுதங்களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பான நினைவூட்டல் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது, காவல் பணியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை முறையாகவும் பொறுப்புடன் கையாளும் நடைமுறைகள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதின் அவசியம், மேலும் விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்வகை பயிற்சிகள் காவல் பணியில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பணியாளர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
















