திருவாரூர்: காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின்கீழ் தனி வீடுகள் கட்ட தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு மன்னார்குடி நகர காவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
மேற்படி இடத்திற்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று (05.10.21) காலைநேரில் வருகை தந்து பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்கள்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் மற்றும் காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர்( E.E) திரு.முருகன் ஆகியோர் உடனிருந்து திட்டம் குறித்து விளக்கினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அந்தோணி ராஜா















