பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்கு கோப்புகளை எவ்வாறு தயார் செய்வது மற்றும் பராமரிப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆயுதப்படை கருத்தரங்கில் நடைப்பெற்றது.
இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி தொடங்கி வைத்தார்.பயிற்றுனர்களாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(க்ரைம் பிரான்ஞ்) திரு.சுப்ரமணி, துணைக் காவல் கண்காணிப்பாளர் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு)
திரு.வளவன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி.நளினி ஆகியோர்கலந்து கொண்டுகாவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்கு கோப்புகளை எவ்வாறு தயார் செய்வது மற்றும் பராமரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.