சேலம் : சேலம் மாநகர காவல்துறை சார்பாக, (21.10.2025) ஆம் தேதி மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பணியின்போது உயர்நீத்த காவலர்களின் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.அனில்குமார் கிரி. இ.கா.ப., அவர்கள், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப. அவர்கள், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் திரு.கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா இ.கா.ப., (தெற்கு) அவர்கள், திருமதி.V.கீதா (தலைமையகம்) அவர்கள், சேலம் ரயில்வே கோட்ட செயல்பாட்டு மேலாளர் (Divisional Operating Manager) திரு.ஆனந்தராகவ்,IRTS., காவல் துறை அதிகாரிகள், காவலர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தார்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு உயிர்நீத்தவர்கள் நினைவாக மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.