கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V.பாலகிருஷ்ணன்.இ.கா.ப., அவர்கள்
D4 குனியமுத்தூர் காவல் நிலையம் சென்று அங்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மதிய உணவு D4 காவல் ஆளிநர்களுடன் சமபந்தி ஏற்பாடு செய்து காவலர்களுடன் இணைந்து மதிய உணவு உட்கொண்டார். அப்போது காவலர்களுக்கு தேவையான நிறை குறைகளை கேட்டறிந்தார்.
காவலர்கள் குடும்பம் அவர்களுடைய குழந்தைகள், படிப்பு, போக்குவரத்து, உடல்நலம் பற்றி விசாரித்தார். அவர்கள் பணி செய்ய இடையூறுகள் இருந்தாலும் அல்லது பணி மாறுதல் தேவைபட்டாலும் உடனடியாக ஏற்பாடு செய்வதற்கு ஆவண செய்வதாக கூறினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்