பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தினை இன்று 02.07.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் (தலைமையிடம்), பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை