திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது, காவலர்களின் ஒழுக்கம், உடல் தகுதி மற்றும் பணித்திறன் மேம்பாட்டிற்கு உடற்பயிற்சி மிக அவசியமானது என்பதை வலியுறுத்தி, தினசரி பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும், காவல்துறையினர் உடல் ஆரோக்கியத்துடன் மன உறுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது ஆயுதப்படை ஆய்வாளர் உடனிருந்தார்.
















