தென்காசி : நம் நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு ஆயுதப்படை பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணராஜ் IPS, அவர்களின் தலைமையில் (18.08.2022), சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் கலவரங்கள் ஏற்படும் போதும் அதை கட்டுக்குள் கொண்டுவர, ஆயுதப்படை காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது. இந்த கலவர தடுப்பு பயிற்சியில் காவலர்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும், கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது. இந்த பயிற்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பையா அவர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. மார்ட்டின் அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.
