திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் கவாத்து பயிற்சி நடைபெற்றது.