கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் முறையான உரிமம் பெற்று அனுமதியுடன் கோவை, உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடம் எதிர்புறத்தில் மலிவுவிலையில் தரமான பட்டாசு கடை செயல்படுகிறது.
இப்பட்டாசு கடையில் உள்ள வெடிபொருள்கள் நேரடியாகவும்,ஆர்டரின் பேரிலும் காவல் நிலையங்களுக்கும் , பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் கொண்டு வந்து தரப்படும்.
இப்பட்டாசுக்கடை மூலம் கிடைக்கும் இலாபத் தொகையினை காவலர்களின் நலனுக்கு செலவிடப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்