திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதால் மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் விளம்பல் பகுதி வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் விளம்பர கல் பாலம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலைக் காவலர் எஸ் மணிகண்டன் என்பவர் பணி முடித்து ஓய்வில் அவரது சொந்த வேலைக்காக அவர் கைக்குழந்தையுடன் வந்தபோது அவளையில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கண்டவர் அவர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் கைக்குழந்தையுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்தை சரி செய்தார். இதனை அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்எஸ் அக்ரி அவர்கள் அந்தக் காவலரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்துக் கூறி வெகுவாக பாராட்டினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்