தஞ்சை: கும்பகோணம் வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் கடந்த 09.06.21 ம் தேதி இரவு திருட்டு தனமாக மணல் கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார் என்பவரை மணல் கடந்தும் கும்பலை சேர்ந்த சிலர் தாக்கியதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்து ஏழு (7) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் வசித்து வரும் ராஜா மகன் விக்னேஷ் என்பவனை நேற்று காவல் துறையினர் பிடிக்க சென்ற போது அவன் தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பிக்க தனது வீட்டு மாடியில் இருந்து குதித்தான் அப்போது விக்னேஷ்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு எழும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பின் போலீசார் அவனை கைது செய்தார்கள் தற்போது, மருத்துவமனையில் அவன் எலும்பு முறிவு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறான் என்பது குறிப்பிட தக்கதாகும் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்