திண்டுக்கல் : (05.09.2022), திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த வருடம் (16.11.2021), ம்தேதி விசாரணைக்கு சென்ற பெண் காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கில் கொடைக்கானல் தெரசா நகரை சேர்ந்த சையது இப்ராஹிம் (30), என்பவரை கொடைக்கானல் காவல் நிலைய காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு கொடைக்கானல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன், அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர் திரு.சுந்தரபாண்டியன், அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.குமரேசன் அவர்களின் சீரிய முயற்சியால் (05.09.2022), ம்தேதி கொடைக்கானல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் -II நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்கள் குற்றவாளி சையது இப்ராஹிம் என்பவருக்கு 06 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா