திருச்சி : திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அனலை பெரியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்த் (26). இவர் ஜீயபுரம் அருகே உள்ள வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
ஆனந்த்திற்கு இணைய வழி ரம்மி சீட்டு ஆட்டம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் இதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வழங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தேதி இரவு 9 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குச் சென்றவர். இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.
இன்று அதிகாலை மூன்று மணிக்கு மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற கோவிந்தராஜ் தனது மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து விட்டு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இவரின் பிரேதம் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜீயபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.