தூத்துக்குடி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான தேர்வு (27.11.2022) தூத்துக்குடி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நடைபெற்றது. அதன்படி பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வுக்கு விண்ணபித்த 2000 விண்ணப்பதாரர்களில் 1659 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 341 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. கிரேஸ் பொறியியல் கல்லூரியில் 1500 விண்ணப்பதாரர்களில் 1247 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 253 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. காமராஜ் கல்லூரியில் 1588 விண்ணப்பதாரர்களில் 1330 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 258 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் 1600 விண்ணப்பதாரர்களில் 1341 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 259 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 1300 விண்ணப்பதாரர்களில் 1062 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 238 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. வ.உ.சி கல்லூரியில் 1400 விண்ணப்பதாரர்களில் 1168 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 232 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1000 விண்ணப்பதாரர்களில் 801 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 199 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1253 விண்ணப்பதாரர்களில் 1016 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 237 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான தேர்வில் 11641 விண்ணப்பதாரர்களில் 9624 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 2017 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.