சென்னை : காட்பாடியில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் தனியாக பயணம் செய்த முதியவரை அவரது குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்தும் வெகுநேரமாக அவர் பதில் அளிக்காததால் பதற்றம் அடைந்து ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். அந்த ரயிலில் பணியில் இருந்த சென்ட்ரல் ரயில் நிலைய காவலர் அருண்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துரிதமாக செயல்பட்ட அவர் ரயில் முழுவதும் தேடி அயர்ந்த நிலையில் இருந்த முதியவரை கண்டுபிடித்து அவரை ஆசுவாசப்படுத்தி அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச வைத்தார். காவலரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். காவலர் அருண்குமாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர், படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, IPS., அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.